உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபர் ஒருவர், ஏழு மாதங்களுக்கு முன்பு இஞ்சோலியைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு, அவரது மனைவி தாடி வைத்திருப்பது பிடிக்கவில்லை எனக் கூறி, தாடியை எடுக்க வலியுறுத்தினார். மதநம்பிக்கையையும் தனித்தன்மையையும் அடையாளமாகக் கொண்டிருந்த கணவர், அதை மறுத்ததால் கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே அந்த பெண் தனது கணவரின் தம்பியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, கணவர் வேலைக்குச் சென்றிருந்தபோது, அந்த வாலிபரின் தம்பியும், மனைவியும் வீட்டை விட்டு திடீரென காணாமல் போனனர்.

முதலில் குடும்பத்தின் நற்பெயருக்காக இதை வெளியே சொல்ல தயங்கிய குடும்பத்தினர், அவர்களைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்தப் பெண் மற்றும் அவரது தம்பி லூதியானாவில் இருப்பது உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் மீட்க சிறப்பு காவல் குழு அனுப்பப்பட்டுள்ளது.

“என் மனைவி எப்போதும் சுதந்திர எண்ணங்கள் கொண்டவள். ஆனால் என் தாடியை அகற்றுமாறு நிரந்தரமாக வற்புறுத்தியது என் நம்பிக்கையை குலைத்தது,” என கணவர் போலீசிடம் தெரிவித்தார். இந்த சம்பவம், சமூகத்தில் கலாசார மோதலுக்கும், குடும்ப மதிப்பீட்டுக்கும் இடையே உள்ள சிக்கல்களை மீண்டும் வெளிக்கொணர்கிறது.