தைவானின் மத்திய பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உணவுப் பொருட்களை பதப்படுத்தும் பிரிவுக்காக புதிய ஐந்து தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயானது கொழுந்து விட்டு எரிந்த நிலையில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்தனர். ஆனாலும் சிலர் கட்டிடத்திற்கு உள்ளே சிக்கி கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.