மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது வருடம் தோறும் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.  திருவிழாவின் ஒரு பகுதியான அழகர் மலை கோவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மிகக் கோலாகலமாக நடைபெறும். மதுரை மாவட்ட ஆட்சியர் நடப்பாண்டில் கள்ளழகர் திருவிழாவின் போது உயர் அழுத்த மோட்டார்கள் கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு  தடை மற்றும் முறையாக முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே பீய்ச்சி அடிக்க  வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆனது கள்ளழகர் திருவிழாவின் போது முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கள்ளழகர் மீது நீரை பீய்ச்சி அடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாடு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது.