கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன்  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக சீமான் அறிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக வெற்றி குமரன் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் விதிமுறைகளின் படி என்னை நீக்க சீமானுக்கு அதிகாரம் இல்லை பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் நாம் தமிழர் கட்சியில் நான் தொடர்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.