இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் கட்டணம் செலுத்தும்போது தொலைபேசி எண்ணைக் கேட்பது வழக்கம்.

இருப்பினும், சிலர் இது போன்ற எண்களை கொடுப்பது பற்றி கவலைப்படுகிறார்கள். தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அவர்கள் இணைய மோசடிகளுக்கு ஆளாக நேரிடும் என்ற சந்தேகம் அனைவரிடமும் உள்ளது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பில் செலுத்தும் போது மொபைல் எண் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.