பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான குளிர்காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 10,500 க்கும் அதிகமானவர்கள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 200க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

அதோடு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்து குறைவாக இருந்ததாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. கடுமையான குளிர் காரணமாக அதிகாலை இறைவணக்க கூட்டத்தை கூட அம்மாகாண அரசு ஜனவரி 31 ஆம் தேதி வரை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.