புனே நகரில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியின் பொசாரி MIDC என்ற இடத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் உரிமையாளர், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது தன் நாயை வேண்டுமென்றே தாக்கச் சொன்னார். நாய் சிறுவனைத் துரத்தி கடித்ததால், அவனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதல் முழுவதும் காணொளியாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வீடியோவில் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், உரிமையாளர் சிறுவனைப் பயமுறுத்தி, “கடி! கடி!” என்று கத்தி நாயைத் தூண்டினார். பயந்து போன சிறுவன் ஓட முயன்றும் நாய் அவனைப் பிடித்து இழுத்து கடித்தது. இதனால் அச்சிறுவன் கீழே விழுந்து அலறினான். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. நாய் உரிமையாளரின் இந்தக் கொடூரச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.