மும்பை நகரின் கஃப் பரேடு பகுதியில் உள்ள பி.டி. சோமனி சந்திப்பு அருகே மே 12 ஆம் தேதி நடந்த சம்பவம், அனைவரையும் பெரும் அதிர்விலும் பெருமையிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது போக்குவரத்து காவலர் பிகாஜி கோஸாவி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு பெண் கடலில் குதித்ததை பார்த்தார். தாமதிக்காமல், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த பின், அவர் தன்னுடைய உயிரை பணயம் வைத்து கடலுக்குள் பாய்ந்து அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்றார். கடலில்  குதித்து அந்தப் பெண்ணை கரைக்கு இழுத்து வந்து, சிபிஆர் கொடுத்து மீட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக, மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டபோது அந்த பெண் உயிரிழந்துவிட்டார்.

 

பொது மக்களுக்காக தன்னலமின்றி பணியாற்றும் காவல்துறையின் உண்மையான விழுமியத்தை காட்டும் இந்த சம்பவம், மும்பை காவல்துறையின் அதிகாரப்பூர்வ X  பக்கத்தில் பகிரப்பட்டது. “மனிதத்தை மறக்காமல், கடமையை உயரமாக கருதி செயல் படும் வீரர்” என புகழாரம் சூட்டியுள்ளனர். மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.