நம்மை சுற்றி பகைவர்களும் துஷ்டர்களும் கெட்ட எண்ணம் கொண்டவர்களும் வன்முறையும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்கு பாதுகாப்பாக இருப்பவர் தான் பிரித்யங்கிரா தேவி. தஞ்சாவூர் மாவட்டம் அய்யாவாடி பகுதியில் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு அம்மாவாசை திதி அன்று மிளகாய் ஹோமம் நடைபெறுவது வழக்கம். பிரத்தியங்கிரா தேவி வழிபாடு என்றால் மிளகாய் ஹோமம் இடம்பெறாமல் இருக்காது. அப்படி சிறப்பு மிக்க மிளகாய் ஹோமத்திற்காக எரியும் யாகக் குண்டத்தில் ஏராளமானோர் மிளகாய்களை அர்ப்பணிப்பார்கள்.

இதில் அதிசயம் என்னவென்றால் எரியும் நெருப்பில் மிளகாய் போட்டாலும் அந்த சமயத்தில் எந்தவிதமான காரமும் நெடியும் கமரலும் இருக்காது. இந்த மிளகாய் ஹோமத்தை நாம் நடத்தினாலும் சரி மற்றவர்கள் நடத்தும் போது கலந்து கொண்டாலும் சரி மன வேதனைகள், நோய்கள், மரண பயம், துன்பங்கள், செய்வினைக் கோளாறுகள் போன்றவை நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிளகாய் ஹோமம் நடத்தி  செய்து பிரித்யங்கிரா தேவியை தரிசனம் செய்வதால் பகை விலகும், நோய் அகலும், கடன் தீரும், சகல விதமான நன்மைகளும் உண்டாகும்.