கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கு கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ராணுவம், அரசியல் , வர்த்தகம் ஆகிய துறைகளில் தலைவர்களின் சுயநலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உலக வங்கியின்  பாக்கிஸ்தான் பிரதிநிதி நஜி பான் ஹாஸ்பின் கூறினார். இதற்கிடையில், பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர்.