நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து புரட்சித்தமிழர் கட்சி தொடங்கி கொடி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ராஜன், சீமான் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில்,
நாம் தமிழர் கட்சியால் சீமான் வளர்ந்து இருக்கிறார். ஆனால் நாம் தமிழர் கட்சியால் யார் வளர்ந்திருக்கிறார்கள் ? சீமானும் அவருக்கு ஜால்ரா போடுறவங்க மட்டும்தான் வளர்ந்து இருக்கிறார்கள்.

தமிழ் வளந்து இருக்கிறதா ? தமிழ்நாட்டில் மிகப்பெரிய படையை வைத்திருக்கிறேன் என்று சொல்லும் சீமான் தமிழ் பிரச்சனக்காக குரல் கொடுத்திருக்கிறாரா ? சும்மா அறிக்கை விடுவார் அவ்வளவுதான். உண்மையான தமிழ் பற்று இருந்தால் உள்ள வரணும் பிள்ளைகளுக்காக குரல் கொடுக்கணும். தமிழ் மக்களை தமிழ் இன சகோதரர்கள் சகோதரிகளை முட்டாளாக்கி சீமான் மட்டும் பலனடைகிறார். இப்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் தேசியம் குறித்து என்ன பேசியிருக்கிறார்? ஒன்றும் பேசவில்லை. தன்னுடைய சுய பெருமை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதை என்றும் செய்வதே இல்லை. அப்படி செய்திருந்தால் 16 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.