
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு பணிகள் தொடங்கிய சில நாட்களில் கனமழை விழுப்புரம் பகுதிகளில் பெய்து வந்தது. மாநாடு திடல் முழுவதும் சேரும் சகதியுமான நிலையில் அவ்வளவு தான் மாநாடு நடக்கப்போவதில்லை மாநாடு தேதி தள்ளிப் போகப்போகிறது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் சொன்ன தேதியில் மாநாடு சிறப்பாக நடத்தப்படும் என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருந்தது.
அதேபோல் மாநாட்டை வெற்றி கரமாக நடந்து முடிந்தது. தளபதி விஜய் அவர்களின் மாநாட்டிற்கு இயற்கையே உதவுவது போல் தற்போது சம்பவம் ஒன்று நிகழ்ந்திருப்பதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக விழுப்புரத்தில் மழை பெய்யவே இல்லை விஜய் அவர்களின் மாநாட்டுக்கு ஒத்துழைக்கும் விதமாக இருந்த மழை மாநாடு முடிந்த சில மணி நேரங்களில் கொட்டி தீர்த்த கனமழையாக மாறி பெய்து வருகிறது என மழை பெய்யும் காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து கடந்த ஒரு வாரமாக பெய்யாமல் மாநாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இருந்த மழை மாநாடு முடிந்த சில மணி நேரங்களில் விழுப்புரம் பகுதிகளில் கொட்டி தீர்த்தது என பதிவிட்டு வருகின்றனர்.