யாரையுமே அவரவர்களின் திறமையையும், கலை ஆர்வத்தையும் அவர்களின் வயதை வைத்து மதிப்பிடக் கூடாது என்பதை 95 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய அசத்தலான நடனம் மூலமாக நிரூபித்திருக்கிறார். அந்தவகையில் சென்னையில் உள்ள விஷ்ராந்தி என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கே தான் அந்த மூதாட்டி வசித்து வருகிறார்.

’ரசிக்கும் சீமானே வா’ பாடலுக்கு இவருடைய அழகான நடனம் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அந்த மூதாட்டி 1940-களில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் மாணவியாக இருந்ததாகவும், ‘சந்திரலேகா’ போன்ற படங்களில் பின்னணி நடனக் கலைஞராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.