இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டது. இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்து விடுகின்றனர். அதே சமயம் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் ஓலா மற்றும் உபர் உள்ளிட்ட சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் ஆப் மூலமாக கேப் சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம் பிரைம் பிளஸ் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.வாடிக்கையாளர்கள் இந்த சேவையில் புக் செய்தால் சேவை ரத்து ஆகாது என்றும் சிறந்த ஓட்டுநர்கள் மற்றும் கார்கள் மட்டுமே இந்த சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. பல சமயம் புக்கிங் கேன்சர் ஆவதால் இந்த சேவை அறிமுகம் செய்துள்ளதாகவும் முதல் கட்டமாக பெங்களூரில் இந்த சேவையை தொடங்கியதாகவும் கூறியுள்ளது.