
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடு வரும் தோனிக்கு தற்போது 42 வயது ஆகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து இப்போது ஓய்வு பெறுவார், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அடிபட்டு வருகின்றது. அதன்படி இந்த சீசன் முடிந்த பிறகு தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்போது தோனியால் மற்றொரு சீசன் விளையாட முடியும் என்று நினைக்கிறோம், ஆனால் ஓய்வோ விளையாடும் முடிவோ அவரை பொறுத்தது என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள இந்த தகவல் தோனி மீண்டும் விளையாடுவார் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் கொடுத்துள்ளது.