போனும் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சு வேலிக்கு வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து ஆகச் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆகஸ்டு 27 காலை 8 மணிக்கு கொச்சு வேலி சென்றடையும்.

பின்னர் மறுமார்க்கமாக கொச்சு வேலியில் இருந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் 14 மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகள், மூன்று படுகை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டு பொது பெட்டிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு பயணச்சீட்டை ஆகஸ்ட் 18 அதாவது இன்று காலை 8 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.