இந்தியாவில் மக்களின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும் ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதன்படி எல்ஐசி 40 ஆண்டுகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறும் வகையில் ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.

இதற்காக எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த பாலிசியில் ஒரு முறை முதலீடு செய்தால் மட்டும் போதும். 30 லட்சம் மதிப்பிலான வருடாந்திர தொகை செலுத்தினால் வாழ்நாள் ஓய்வூதியமாக மாதம்தோறும் 12500 ரூபாய் கிடைக்கும். பாலிசிதாரர் உயிரிழந்தால் செலுத்தப்பட்ட முதலீடு நாமினிக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.