ஆந்திராவில் பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் இன்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுவுக்கு கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதுபோன்று மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பிறகு மேடையில் இருந்த பிரபலங்களை நலம் விசாரித்த பிரதமர் மோடி சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணின் கைகளை மேடையில் வைத்து உயர்த்தி காட்டினார். அப்போது பாலகிருஷ்ணா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் மேடைக்கு வந்த நிலையில் அவர்கள் இருவரையும் சந்திரபாபு நாயுடு மோடியிடம் அழைத்துச் சென்றார். அப்போது ரஜினிகாந்திடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி பாலகிருஷ்ணா மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். மேலும் பல பிரபலங்கள் ஒரே மேடையில் நின்று கொண்டிருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.