தமிழ் சினிமாவில் குஷி மற்றும் வாலி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் எஸ்.ஜே சூர்யா. இந்த படங்களைத் தொடர்ந்து நியூ என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். இந்த படத்தில் நிறைய அடல்ட் காட்சிகள் இருந்ததால் படத்திற்கு யூ சான்றிதழும் கொடுக்க முடியாது யூஏ கொடுக்க முடியாது என பெண் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனால் கோபத்தில் எஸ்.ஜே சூர்யா அந்த பெண் அதிகாரி மீது தன் கையில் வைத்திருந்த செல்போனை தூக்கி வீசினாராம்.

இதனால் எஸ்.ஜே சூர்யா மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். அதன் பிறகு தடை செய்யப்பட்ட காட்சிகளின் போஸ்டர்கள் நிறைய இடங்களில் ஒட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால் அதற்காகவும் எஸ்.ஜே சூர்யா கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமினில் வெளியே வந்துள்ளார். மேலும் இப்படி ஒரு படத்திற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யா இருமுறை கைது செய்யப்பட்டு வெளியே வந்த சம்பவம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.