இன்ஸ்டாகிராமில் பிரபலமான பயனராக இருக்கும் மஹின் ஷாஜகான் என்பவர் தன்னுடைய பயணம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அதாவது மதம் தடையல்ல அது ஒரு பாலம் என்ற வாசகத்துடன் அவர் வெளியிட்ட வீடியோவில் வெளிநாட்டு பெண்களுக்கு அவர் தலையில் சிந்தூரம் அதாவது குங்குமம் வைத்து விடுகிறார். அவர் மூன்று வெளிநாட்டு பெண்களுக்கு கேரளாவில் வைத்து சிந்தூரம் வைத்துவிட்ட நிலையில் இந்த வீடியோவை பார்த்தவர்கள் திருமணமான பெண்கள் மட்டுமே தலையில் வைத்துக் கொள்ளும் சிந்துரத்தை இப்படி ஒருவர் மூன்று பெண்களுக்கு வைத்திருப்பது மிகவும் தவறு எனவும் இது மத நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக இருக்கிறது எனவும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவர் தான் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Brut India (@brut.india)