இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 9230 ரகளை குவித்துள்ளார். தன்னுடைய 14 ஆண்டு கால டெஸ்ட் பயணம் முடிவுக்கு வருவதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே உலக கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒரே நேரத்தில் அறிவித்த நிலையில் தற்போது இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பாகவே இரு பெரும் ஜாம்பவான்கள் ஓய்வு முடிவை அறிவித்தது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.