
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் முதல்வர் மோகன் யாதவுடன் பொதுமக்கள் பலர் சேர்ந்து நேற்று 24 மணி நேரத்தில் சுமார் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தது. அவர்கள் 9 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்திருந்தனர்.
இந்த சாதனையை தற்போது மத்திய பிரதேச மாநிலம் முறியடித்ததோடு, கின்னஸ் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், “தூய்மையான நகரம் என்ற சாதனையை அடுத்து ஒரே நாளில் அதிகம் மரக்கன்றுகளை நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்துள்ளோம். இது எனக்கு மிகுந்த மகிழிச்சி அளிக்கிறது. இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.