பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமைச்சர் சேகர்பாபு திருப்பதி சென்றால் ஒரு நாள் முழுவதும் காத்திருந்து சாமி தரிசனம் செய்பவர்கள் திருச்செந்தூரில் ஒரு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடியாதா என்று கேட்டுள்ளார். இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறையின் லட்சணம் தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை என்றே ஒன்றே இருக்காது. முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வந்தால் தெரியும் மக்கள் அவர் மீது எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கண்டிப்பாக கூட்டணியில்லை. கொள்கை ரீதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம். அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறும் நிலையில் கடந்த 10 வருடங்களில் மட்டும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு மட்டும் 11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பாஜகவினர் மீது வேண்டுமென்றே போலீஸ் வழக்கு பதிவு செய்யும் நிலையில் கவர்னருக்கு எதிராக பிரதமர் வரும்போது எல்லாம் அவதூறாக போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றார். அதன்பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வேண்டும் என்று சொல் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார் என்று கூறினார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது பிரதமர் மோடியை சர்வாதிகாரியாக மாற்றுவதற்காக பாஜக செய்யும் பிளான் என்றும் இது பாஜகவுகே ஆபத்தாக முடியும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறிவரும் நிலையில் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மறைந்த தலைவர் கருணாநிதி கூட ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வர வேண்டும் என்று சொன்னதாக அண்ணாமலை கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.