விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் 156 பேர் வேதியியல்  பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் செஞ்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 65 அரசு பள்ளி மாணவர்களும், 91 தனியார் பள்ளி மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 45 அரசு பள்ளி மாணவர்கள், 25 தனியார் பள்ளி மாணவர்கள் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி எந்த முறைகேடும் நடக்கவில்லை. வினாத்தாள் கசியவில்லை என உறுதி அளித்தார். இந்த ஆண்டு வேதியியல் வினாத்தாள் 80 சதவீதம் சுலபமாக வந்ததால் 156 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.