பல  ஆண்டுகளாகவே  முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் இதுவரையில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.  வேற்றுக் கிரகவாசிகள் பூமியில் ரகசியமாக மனிதர்களுடன் வாழ்ந்து வருவதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அடையாளம் காண முடியாத உயிரினங்கள் மற்றும்  UFO-க்கள் நிலத்தடிகளில் வாழலாம்.

நிலவின் மேல் நடக்கலாம். ஏன் மனிதர்களுடன் கூட நடமாடி வரலாம், பறக்கும் தட்டுக்கள் நிலத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சில வேலை அவை மனித சமூகத்துடன் ஒன்றிணைந்து போய் இருக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏற்க மறுத்தாலும் மறுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.