கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி பிரச்சனைகள் எழுகின்றன. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு பல புகார்கள் எழுந்த நிலையில் ஒரு வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்க மாநகராட்சி தற்போது திட்டமிட்டுள்ளது.

கூடுதலாக நாய்களை வளர்க்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக பணம் கட்டி லைசென்ஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன. வருடத்திற்கு 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன் இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என திருவனந்தபுரம் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.