அடுத்த மாதம் முதல் புது டிரைவிங் லைசென்ஸ் பெறுவது சற்று கடினமானதாக இருக்குமென சொல்லப்படுகிறது. இந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் ஓட்டுநர் சோதனை தடங்கள் தானியங்கு முறையில் மாறப் போகிறது. டெல்லியில் மொத்தம் 13 டிரைவிங் டெஸ்ட் டிராக்குகளானது இருக்கிறது. இதுவரையிலும் 12 ட்ராக்குகள் தானியங்கி முறையில் இயக்கப்பட்டு உள்ளது. டெல்லி மட்டுமல்லாமல் மேலும் சில மாநிலங்களிலும் தானியங்கி ஓட்டுநர் சோதனை தடங்களுக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த தானியங்கு டிராக்குகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் சென்சார்களின் கண்காணிப்பில் உள்ளதால் தானியங்கி பாதையில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவது சற்று கடினமாக இருக்கும். அதே நேரம் இந்த தானியங்கி ஓட்டுநர் சோதனையில் உங்களுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கப்பெறும்.

ஆகவே டெல்லியின் அனைத்து சோதனை தடங்களும் தானியங்கு முறையில் செயல்படுத்தப்பட்ட பின் இதில் எந்தவொரு நபராலும் ஆதிக்கம் செலுத்தமுடியாது. அதோடு ஓட்டுநர் உரிமம் பெற முழுத் தேர்விலும் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த தானியங்கு முறையில் சோதனை தடங்களை அமைப்பதன் வாயிலாக தகுதியற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் கொடுப்பது தவிர்க்கப்படுவதோடு, சாலை விபத்துக்களும் குறையும்.