பொதுவாக சில பெண்கள் தாங்கள் வெளியே செல்லும்போது கைப்பைகள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் எனவும் தங்களின் ஆடைகளுக்கு ஏற்ப  இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதோடு சில பெண்கள் விலை உயர்ந்த கைப்பைகள் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ஒரு இளம் பெண் ஒரு லிப்ஸ்டிக்கை எடுத்து செல்வதற்காக 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹேண்ட் பேக்கை வாங்கியுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

அந்த வீடியோவில் தாயும் மகளும் ஒரு கடைக்கு ஹேண்ட் பேக் வாங்க செல்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஹேண்ட் பேக்கை எடுத்த நிலையில் பின்னர் ஒரு சிறிய ஹேண்ட்பேக்கை மகள் எடுத்து அந்த ஹேண்ட்பேக் வேண்டும் என்று கேட்கிறார். அதன் விலை 27 லட்ச ரூபாய். அந்த ஹேண்ட்பேக் தன்னுடைய தேனிலவுக்கு கொண்டு செல்ல நன்றாக இருக்கும் எனவும் லிப்ஸ்டிக்கை வைக்க எதுவாக இருக்கும் என்றும் அந்த பெண் கூறுகிறார். மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.