
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஒரு சிறுவன் தட்டு நிறைய ரஸ்க் வைத்துக் கொண்டு அதில் காபியை ஊற்ற முயற்சி செய்கிறான். முதலில் இடது பக்கம் இருந்து காபியை ஊற்றிய நிலையில் அது தட்டில் விழாமல் கீழே சிந்தியது. இதனால் சிறுவன் வலது பக்கத்திலிருந்து ஊற்றினால் அது தட்டில் வந்து விழுந்து விடும் என எண்ணி அந்த பக்கம் வைத்து ஊற்றுகிறார்.
ஆனால் அப்போது சரியான முறையில் காபி கீழே வந்தது. இதனால் சிறுவன் ஒரு நொடி என்ன செய்வது என தெரியாமல் கடுப்பில் முகத்தில் அப்படி ஒரு ரியாக்சன் கொடுத்தார். இது பற்றி பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது தட்டில் ரஸ்கை வைத்து காபியை ஊற்றுவதற்கு பதிலாக காபியை கீழே வைத்துவிட்டு அதில் ரஸ்கை முக்கி சாப்பிட்டால் ஈசியாக வேலை முடிந்துவிடும். மேலும் அதற்காக ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என பலரும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
सट्टा लगाने वाले लोगो की इस्तिथि बिल्कुल ऐसी ही होती है !!
😭😂🤣😝😭😜🤧🤗🔥🔥 pic.twitter.com/pNRIFJENiI
— FIGHTER 3.0 🚩 (@AAjju_33) June 10, 2025