
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்ததாக நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படமும் அவருக்கு தோல்வியை கொடுத்தது. இதன் காரணமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அனுபமா, ஒரு படத்திலாவது எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். வில்லியாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற வேண்டும் என்பது என்னுடைய கனவு. சிலர் நடிகைகள் வெளியாக நடிப்பதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏன் அது போன்ற கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்று ஏங்குவேன். அந்த வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் நம்பிக்கை தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.