டெல்லியில் குல்தீப் சோவானி என்பவர் வசித்து வருகிறார். துணிக்கடை உரிமையாளரான இவருக்கு திருமணமாகி ருச்சிகா என்ற மனைவியும் 14 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில் குல்தீப்பிடம் முகேஷ் என்ற பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதில் முகேஷ் ருச்சிகா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் முதலாளி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவியையும் மகனையும் கொடூரமாக கழுத்தறுத்துக் கொன்றுள்ளார்.

இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த குல்தீப் காலிங் பெல் அடித்தும் மனைவி கதவை திறக்காததால் பதற்றம் அடைந்து செல்போனுக்கு தொடர்பு கொண்டார். இதற்கிடையில் வீட்டில் ரத்தக் கரைகளை கண்ட அவர் பதற்றமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில் படுக்கையில் அவரது மனைவியும் குளியலறையில் அவரது மகனும் பிணமாக கிடந்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் முகேஷ் அவர்களை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.