
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உலாஷ் நகர் அமைந்துள்ளது. இந்த விஷால் சுவாய் என்ற 33 வயது நபர் வசித்து வருகிறார். இவர் தர்ஷனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்குப் பிறகு தர்ஷனாவின் பெற்றோரிடம் வரதட்சணை கேட்டு விஷால் துன்புறுத்தியுள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் தொடர்ந்து விஷால் தன் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.
அதோடு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றும் கூறி அவரை மனவேதனைக்கு ஆளாக்கினார். ஆண் குழந்தை வேண்டும் என்று கூறி தர்ஷனாவை அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் வேதனையில்கடந்த 1ஆம் தேதி தர்ஷனா தன் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்துள்ளனர். மேலும் தர்ஷனா உயிரிழந்த நிலையில் விஷால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெண் குழந்தைகள் பரிதவிப்பில் இருக்கிறது.