
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தற்போது எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இவர் முன்னதாக கொச்சியிலுள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். இந்த பங்களாவானது பார்க்க மிக மிக வித்தியாசமாக இருப்பதால் இதற்கு முன்பாக நின்று ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். இந்நிலையில் இந்த பங்களா ரசிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது.
வெக்கேஷன் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நிறுவனம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. இந்த பங்களாவில் நான்கு படுக்கை அறைகள் கொண்ட வசதி உள்ளது. இதில் ஒரு நாள் தங்குவதற்கு 75 ஆயிரம் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதில் தங்குவதற்கு செல்போன் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . மம்மூட்டி வாழ்ந்த வீடு என்பதால் ரசிகர்கள் பலரும் முன்பதிவு செய்து வருகிறார்கள்.