ஒன்றிய நிதி அமைச்சரே எனக்கு மரியாதை தெரியவில்லை என்று சொன்னீர்கள் இப்போது நான் மரியாதையாகவே கேட்கிறேன்.. வெள்ள பாதிப்பு நிவாரணத்திற்கு எங்களுக்கு நிதி கொடுங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நிதி கேட்ட பொழுது மத்திய அரசு கேட்ட நிதியை விட குறைவான தொகையை கொடுத்திருந்தது. இதற்கு திமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எங்களிடம் என்ன ஏடிஎம் மிஷினா? இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உதயநிதி, நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை. தமிழக மக்கள் கொடுத்த வரிப்பணத்தை தான் கேட்கிறோம் என்றும் கூறியிருந்த நிலையில் உதயநிதியின் இந்த பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். இதனை அடுத்து நிர்மலா சீதாராமனுக்கு தன்னுடைய பாணியில் கிண்டலாக உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வெள்ள பாதிப்புகள் நிதி கேட்டாலும் மத்திய அமைச்சர் ஒருவர் கிண்டலாக பேசுகிறார். அதனால் தான் உங்கள் அப்பன் வீட்டு பணத்தை நாங்கள் கேட்கவில்லை என்று கூறினேன்.

இன்று நேற்று அல்ல எப்போதுமே தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் மத்திய அரசு நடத்துகிறது. நம்மை மரியாதையாக பேசுமாறு மத்திய நிதியமைச்சர் பாடம் எடுக்கிறார். மத்திய அமைச்சர் அவர்களை இப்பொழுது நாங்கள் மரியாதையாகவே கேட்கிறோம் என்று அவர்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.