ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குறுகலான ரயில் பாலத்தில் நின்று கொண்டு ட்ரோன் மூலமாக புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்பொழுது அந்த தண்டவாளத்தில் திடீரென்று ரயில் வந்துள்ளது. இதனால்  அதிர்ச்சியடைந்த அந்த தம்பதி பயத்தில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் திடீரென்று  90 அடி பள்ளத்தில் குதித்துள்ளனர்.

இதனை அடுத்து ரயிலை நிறுத்திய ஓட்டுனர்கள் கீழே விழுந்த ராகுல் – ஜான்வி தம்பதியை அவர்களின் நண்பர்களோடு இணைந்து மீட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.