நடிகர் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முக தலைமை கொண்டவர் தான் டி.ஆர் ராஜேந்திரன். அவ்வப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய மகன் சிம்பு. இந்நிலையில் டி.ஆர் ராஜேந்திரன் திடீர் உடல் நலக்குறைவால் கடந்த வருடம் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார். தன்னுடைய தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டார் நடிகர் சிம்பு.

இதனையடுத்து சிகிச்சைக்கு பிறகு இந்தியாவிற்கு திரும்பிய டி.ஆர் ராஜேந்திரன் அதிகமாக சினிமா நிகழ்ச்சிகளில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டி.ஆர் ராஜேந்திரனை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள். சுத்தமாக ஆளே மாறி உள்ள அவர் தலையில் முடி கொட்டி மெலிந்து போய்விட்டார். எப்போது விறுவிறுவன நடப்பவர் மிகவும் பொறுமையாக நடந்து வந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.