
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின்புதூர் அருகே கல்லூரணி மேற்கு தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் முத்துசாமிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் சாலையின் வளைவு பகுதியில் திரும்பிய போது ராஜம்மாள் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே ஓடையில் விழுந்தார்.
உடனே காசிராஜன் அந்த பகுதி மக்களுடன் இணைந்து தனது மனைவியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.