
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு போட்டிக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று மும்பையில் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அணியின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐபிஎல் அணிகளின் அனைத்து உரிமையாளர்களும் கலந்து கொண்ட நிலையில் அணி உரிமையாளர்களுக்கு இடைய காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளது. அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன் ஒரு கருத்தை முன் வைத்தார்.
அதாவது ஐபிஎல் அணியில் வாங்கப்படும் வீரர்கள் கடைசி நேரத்தில் காயத்தை காரணம் காட்டி அணியிலிருந்து வெளியேறினால் அவர்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதன் பிறகு குறைந்த விலைக்காக வாங்கப்படுகிறார்கள் என்ற காரணத்திற்காக சில வீரர்கள் விளையாடாமல் போகிறார்கள். அப்படி இந்த சீசனில் நிறைய வெளிநாட்டு வீரர்கள் விளையாடவில்லை. எனவே அவர்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் கடந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக இலங்கை வீரர் ஹசரங்கா 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர் மிகப்பெரிய தொகைக்கு விலை போவார் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசியில் குறைந்த தொகைக்கு விலை போனதால் அவர் அந்த சீசனில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.