ஐபிஎல் தொடரின் சிறந்த விளையாடும் லெவன் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தேர்வு செய்தார்..

16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் அதிக முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பையின் சாதனையை சிஎஸ்கே அணி சமன் செய்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்ற மற்றும் விளையாடிய அனைத்து அணிகளின் வீரர்களையும் சேர்த்து நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த விளையாடும் 11 பேர் யார் என்று பல முன்னாள் வீரர்கள் கணித்து பட்டியலிட்டுள்ளனர்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான சிறந்த விளையாடும் 11 பேரை அறிவித்துள்ளார். அந்த வகையில் அவர் தேர்வு செய்த இந்த அணியின் கேப்டனாக டுபிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தனது தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில்லையும் தேர்வு செய்துள்ளார்.

மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். ஹென்ரிச் கிளாசினை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், ரிங்கு சிங் பின்வரிசை ஃபினிஷராகவும், ரஷித் கான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை ஆல்-ரவுண்டர்களாகவும் தேர்வு செய்துள்ளார்.

முகமது ஷமி, முகமது சிராஜ், மோகித் சர்மா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இம்பாக்ட் பிளேயராக மதீஷா பத்திரனா சேர்க்கப்பட்டார்.

இர்பான் பதான் தேர்வு செய்துள்ள சிறந்த விளையாடும் 11 பேர் :

1) டு பிளெசிஸ், 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) சூர்யகுமார் யாதவ், 5) ஹென்ரிச் கிளாசன், 6) ரிங்கு சிங், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரஷித் கான், 9) முகமது ஷமி, 10) முகமது சிராஜ், 11 ) மோஹித் ஷர்மா. (இம்பாக்ட் பிளேயர் : மதீஷா பத்திரனா)