மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்ப தயாராகி விட்டார் சிவம் துபே..

இந்திய கிரிக்கெட் அணி 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதே தொடரில்தான் இந்திய அணி சூப்பர் ஓவரில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் இந்தியாவின் தோல்வி உறுதியாகியது. காரணம் சிவம் துபே வீசிய ஒரே ஓவரில் ராஸ் டெய்லர் மற்றும் டிம் சீஃபர்ட் 34 ரன்கள் எடுத்தனர். டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியப் பந்துவீச்சாளர்களின் காஸ்ட்லி  ஓவராக இதுவே உள்ளது. இந்த போட்டிக்கு பிறகு துபேக்கு மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அயர்லாந்துக்கு எதிரான தொடரில் துபே திரும்பினார் :

ஷிவம் துபே சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் துபே இடம் பெற்றுள்ளார். ஐபிஎல்-ல் அவரது ஆட்டம் இந்திய அணிக்கு திரும்புவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடிய துபே 16 போட்டிகளில் 158 ஸ்டிரைக் ரேட்டில் 418 ரன்கள் எடுத்தார். இதன் போது அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 35 சிக்ஸர்கள் அடித்தார். பவுண்டரிகளை விட 3 மடங்கு அதிக சிக்ஸர்களை பறக்க விட்டார். அவர் சுழற்பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தினார்..

மிடில் ஆர்டரில் பெரிய பொறுப்பு இருக்கும் :

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் சிவம் துபே மீண்டும் களமிறங்குகிறார், ஆனால் சஞ்சு சாம்சனுக்குப் பிறகு பேட்ஸ்மேன்களில் அதிக அனுபவம் பெற்றவர். இந்தியாவுக்காக 13 டி20 போட்டிகளில் விளையாடி 105 ரன்கள் எடுத்துள்ளார். 54 ரன்கள் எடுத்ததே மிகப்பெரிய இன்னிங்ஸ். மேலும் டி20 கிரிக்கெட் பற்றி பேசுகையில், துபே 106 போட்டிகளில் 1913 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 111 பவுண்டரிகள் மற்றும் 117 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அயர்லாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அவர் மிகப்பெரிய சவாலாக இருப்பார்.

சிவம் பந்து வீசுவாரா?

ஷிவம் துபே பந்து வீசுவாரா என்பதே அனைவரின் மனதிலும் உள்ள கேள்வி. ஐபிஎல் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பேட்ஸ்மேனாக விளையாடினார். அவர் மும்பைக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் பந்து வீசினாலும், தியோதர் டிராபியில் மேற்கு மண்டலத்துக்காகவும் பந்து வீசியுள்ளார். இருப்பினும் அயர்லாந்து தொடரில் பந்து வீசும் வாய்ப்பு குறைவு தான்..