ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்றும் மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தொடரில் விளையாட போகும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. இந்த கோப்பையுடன் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரஹானே, ரோஹித் சர்மா, ரவி சாஸ்திரி ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.