
பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானிடமிருந்து பிரிவதாக சாய்ரா அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாய்ரா பானு ஏ ஆர் ரகுமான பிரிவதாக வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு கணவர் ஏ. ஆர் ரகுமானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குமான இடைவெளியை தொடர்ந்து வலி மற்றும் வேதனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததால் ஏ.ஆர் ரகுமானின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுவரை ஏஆர் ரகுமான் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை .