பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானிடமிருந்து பிரிவதாக சாய்ரா அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாய்ரா பானு ஏ ஆர் ரகுமான பிரிவதாக வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் பற்றி யூடியூப் சேனல் உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது. இந்த நிலையில் சாய்ரா பானு ஆடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரகுமான் பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள். அவர் இந்த உலகிலேயே மிகவும் அற்புதமான மனிதர். கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் சிகிச்சைக்காக மும்பையில் தங்கி இருக்கிறேன். அதனால்தான் ஏ.ஆர் ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன்.

என் உடல்நிலை காரணமாகத்தான் இந்த பிரிவு. பிசியான நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அந்த அளவுக்கு சிறந்த மனிதர் இல்லை. அவரை நான் அந்த அளவுக்கு நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் சென்னை திரும்புவேன். அவர் பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் மிக சிறந்த மனிதர் என கூறியுள்ளார்.