
அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாநில உயர்நிலைப்பள்ளியில் கிளாஸ் 3 இன்டோர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற கேலன் டக்கர் என்ற மாணவி ஐசி நோர்கம் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு வீராங்கனையை முந்தி செல்ல முயன்றார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அந்த வீராங்கனை தனது கையில் இருந்த ரிலே குச்சியால் டக்கரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் டக்கர் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
அதனை கண்டு கொள்ளாமல் நோர்கம் வீராங்கனை தனது ஓட்டத்தை தொடர்ந்தார். இதனை பார்த்த போட்டி நடுவர்கள் நோர்கம் அணியை போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் நோர்கம் அணியில் இருந்து யாரும் பாதிக்கப்பட்ட டக்கரை பார்க்கவோ மன்னிப்பு கேட்கவோ இல்லை. இதற்கிடையே மாணவியை சக வீராங்கனை தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram