இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள வங்கிகள் அல்லது என்பிஎப்சியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவறினால் அபராதம் விதிக்கும் புதிய விதிகள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட நியாயமான கடன் வழங்கும் அமைப்பு, வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வருவாய் வளர்ச்சிக்காக கடன் செலுத்த தவறியதால் தண்டனை கட்டணங்களை சுமத்துவதை தடுக்கின்றது.

இந்த புதிய விதி ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வருவாயை அதிகரிப்பதற்காக கடன் செலுத்துவதில் தவறிவிட்டால் அபராத கட்டணங்களை விரித்து வரும் நிலையில் இதனை தடுக்க ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி விதிகளை திருத்தி அமைத்தது குறிப்பிடத்தக்கது.