திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியில் பாலாற்றின் கோரிக்கை பாலம் கட்டுவதற்கு கடந்த 2023-ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. இதனைyaடுத்து பாலம் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணல் மலை போல் ஆற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

அந்த மணலை ஒப்பந்ததாரர்களும், மணல் கொள்ளையர்களும் சேர்ந்து இரவு நேரம் கொள்ளையடித்து செல்வதாக ஊர் மக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். அதன்படி வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

நேற்று கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்ததோடு ஒப்பந்ததாரர் வேலுசாமி மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி கிராம அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூபாலன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.