ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலி புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதை எளிமையாக அடையாளம் காணும் வகையிலான அம்சத்தினை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. சர்பிரைஸாக கூகுள் சாட்போட் ஏஐ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி டெக் உலகில் கோலோச்சும் போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவற்றில் ஒன்று தான் போலி புகைப்படங்களை கண்டுபிடிக்கும் About this image தொழில்நுட்பமும்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் அம்சம் புகைப்படத்தின் மெட்டாடேட்டாவை சரிபார்க்கும். இதில் மெட்டாடேட்டா என்பது ஒரு படத்துடன் சேமித்துவைக்கப்படும் தரவு மற்றும் படத்தை உருவாக்கிய தேதி, நேரம், அதை எடுக்கப் பயன்படுத்திய கேமரா ஆகிய தகவல்களை வழங்க முடியும். ஒரு படத்தின் மெட்டாடேட்டா படத்துடன் பொருந்தவில்லை எனில், அது படம் போலியாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.