யூகோ வங்கியின் (UCO Bank) ஒரு உள் மின்னஞ்சல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த மின்னஞ்சல் சென்னை மண்டலத் தலைவர் ஆர்.எஸ். அஜித் மீது புகார் கூறுகிறது. அவர் ஊழியர்களிடம் மிகவும் கடுமையாகவும், அவமரியாதையாகவும், அதிகாரம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் தனது தாயார் இறந்ததால் விடுப்பு கேட்டபோது, அஜித், “எல்லோருடைய அம்மாவும் இறப்பார்கள், நாடகம் ஆடாதீர்கள், உடனே வேலைக்கு வாருங்கள், இல்லையெனில் சம்பளத்தை குறைத்துவிடுவேன்” என்று கூறியதாக மின்னஞ்சலில் எழுதப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், ஒரு கிளை மேலாளரின் ஒரு வயது குழந்தை மருத்துவமனையில் இருந்தபோது, அவர் விடுப்பு கேட்டதற்கு அஜித், “நீங்கள் டாக்டரா? இல்லையெனில் மருத்துவமனையில் என்ன செய்கிறீர்கள்? உடனே அலுவலகத்திற்கு வாருங்கள், இல்லையெனில் சம்பளத்தை குறைத்துவிடுவேன் என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித் ஊழியர்களை வேலைக்காரர்களைப் போல நடத்தி, அலுவலகத்தில் பயம் நிறைந்த சூழலை உருவாக்கியுள்ளதாக ஊழியர் புகார் கூறுகிறார்.
Mother died? — ‘Everyone’s mother dies, don’t be dramatic.’
Child in ICU? –‘Are you a doctor? Go to office or LWP.’
Wife hospitalized? –‘You are useless.’,
This is how @UCOBank’s Zonal Head treats his own officers. Not leadership, but barbaric dictatorship. Shame on this… pic.twitter.com/U0TwJIASqX
— Venkatesh Alla (@venkat_fin9) September 28, 2025
இந்த மின்னஞ்சலின் புகைப்படத்தை @venkat_fin9 என்ற X கணக்கு பகிர்ந்து, RBI, யூகோ வங்கி, நிதி அமைச்சகத்தை குறிப்பிட்டு, “இதுதான் மண்டலத் தலைவரின் நடத்தை, இது தலைமை இல்லை, அதிகாரவாதம்” என்று எழுதியுள்ளார். ஆனால், யூகோ வங்கியிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
