
தமிழிசை சௌந்தரராஜனை விமர்சித்தது உள்ளிட்ட விவகாரங்களால் திருச்சி சூர்யா உள்ளிட்ட சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்.
நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன். ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது. தனது கண் எதிரிலேயே திமுக அமைச்சர்களுடன் அண்ணாமலை பலமுறை பேசியுள்ளார். அண்ணாமலை நாடகம் குறித்து மக்களிடம் தெரிவித்து அவரது முகத்திரையை கிழிக்கப் போவதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.