இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோல் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களால் காற்று மாசு அதிக அளவு ஏற்படுவதால் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்க அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களின் மூலமாக வரும் கார்பன் உமிழ்வு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீர்க்கும் என்பது வெறும் கட்டுக்கதை மற்றும் தவறான கருத்து. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் மற்றும் பவர் கிரிட் சுற்றுச்சூழலை மிகவும் தீவிரமான முறையில் மாசுபடுத்தும் என்பதுதான் உண்மை என மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி ரேணுகா சௌத்ரி கூறியுள்ளார்.